இயக்குநர்கள் சங்கத் தேர்தல்: விக்ரமன் அணி வெற்றி!
இயக்குநர் சங்கத் தேர்தலில், 3-வது முறையாக இயக்குநர் விக்ரமன் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
2017- 2019ம் ஆண்டிற்கான தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கான தேர்தல் சென்னையில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட நீதிபதி பாலசுப்பிரமணியன் தேர்தல் பார்வையாளராக செயல்பட்டார்.
நேற்று
(ஜூலை
30) காலை
8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணியளவில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது.
2390 உறுப்பினர்களைக் கொண்ட இச்சங்கத்தில் 2031
பேர்
வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தார்கள். அதில் 1601 வாக்குகள் பதிவாகியிருந்தது. இதில் 'புதிய வசந்தம்' அணியில் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட விக்ரமன் 1538 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் தொடர்ச்சியாக 3-வது முறையாக இயக்குநர் சங்கத் தலைவராக பொறுப்பேற்கிறார் விக்ரமன்.
'புதிய வசந்தம்' அணி சார்பில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட பேரரசு ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
மீண்டும்
தலைவராக
வெற்றி
பெற்றிருப்பது குறித்து இயக்குநர் விக்ரமன், "இதுவரை நடந்த இயக்குநர் சங்கத் தேர்தலில் இவ்வளவு அதிகமான வாக்குகள் பெற்று யாரும் வெற்றி பெற்றதில்லை. என் மீது வைத்துள்ள நம்பிக்கையை உண்மையாக்கும் விதத்தில் செயல்படுவேன். உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளை 6 மாதத்தில் நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment