விஜய்யை
தொடர்ந்து உதயநிதியுடன் மகேந்திரன்
பிரியதர்ஷன் இயக்கத்தில் மகேஷின்டெ பிரதிகாரம்’ படத்தின் ரீ-மேக்காக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
படத்தின்
கதாநாயகிகளாக நமீதா பிரமோத், பார்வதி நாயர் நடிக்கின்றனர். இவர்களுடன் சமுத்திரக்கனியும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்து வருவதோடு அவரே படத்திற்கு வசனமும் எழுதியுள்ளார்.
இந்நிலையில் படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இயக்குனர் மகேந்திரன் நடிக்கிறார். விஜய்யின் தெறி படத்தை தொடர்ந்து எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார் மகேந்திரன்.
இந்நிலையில் பிரியதர்ஷன் வடிவமைத்த கதாபாத்திரம் பிடித்து போக உடனடியாக ஒத்துக் கொண்டுள்ளார். இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

No comments:
Post a Comment