test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, 31 July 2017

தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ்: ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகிறது 'விவேகம்'

தணிக்கையில் 'யு/' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 24-ம் தேதி 'விவேகம்' வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


'விவேகம்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்திருந்தார்கள். தணிக்கை முடிந்தவுடன் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டது. 'விவேகம்' வெளியீட்டு தேதிக்காக பல்வேறு திரைப்படங்கள் தங்களது வெளியீட்டை இறுதி செய்ய முடியாமல் இருந்தார்கள்.

இன்று (ஜூலை 31) காலை தணிக்கை அதிகாரிகள் 'விவேகம்' படத்தைப் பார்த்துள்ளார்கள். 'யு/' சான்றிதழ் கொடுக்கவே, தற்போது ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. தற்போது இதர படங்கள் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.


சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'விவேகம்' படத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்

அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot