test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, 31 July 2017

தனுஷ்: இந்திப் படங்களை இயக்க ஆர்வமாக உள்ளேன்

இந்திப் படங்களை இயக்கும் ஆர்வம் உள்ளதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

'ராஞ்சனா' படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ், அந்தப் படத்தில் நடித்ததற்கு விமர்சகர்களிடமும், மக்களிடமும் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த 'ஷமிதாப்' படமும் அவருக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தது.

தற்போது தனது அடுத்த கட்ட திட்டங்களைப் பற்றி பேசியுள்ள தனுஷ், "ராஞ்சனாவும், ஷமிதாபும் பெருவாரியான இந்தி பேசும் ரசிகர்களிடம் என்னை கொண்டு சேர்த்தன. அதற்குப் பிறகு, இங்கு எப்படி எது வேலை செய்யும் என்பதைப் புரிந்து கொண்டேன். தற்போது நான் செய்து கொண்டிருக்கும் படங்களும் பலதரப்பட்ட மக்களைச் சென்றடைவதில் மகிழ்ச்சி. தொடர்ந்து இந்திப் படங்களை இயக்குவதில் ஆர்வமாக உள்ளேன்" என்றார்.

தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், தான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். "உலகம் சிறியதாகிவிட்டது. சில வருடங்களுக்கு முன் சூழல் வேறு. ஆனால் இப்போது எந்த தேசத்துக்கு, நகரத்துக்கு, கண்டத்துக்கு சென்று பாலிவுட் என்றாலும் அவர்களுக்குப் புரிகிறது. எல்லோரும், எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


கலைஞர்களுக்கு புதிய கதாபாத்திரங்கள் வைத்து பரீட்சார்த்த முயற்சிகள் செய்து பார்க்க வாய்ப்பு கிடைக்கும் ஒரு காலகட்டத்தில் பங்காற்றுவது எனது அதிர்ஷ்டமே" என்று தனுஷ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot