test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, 23 July 2017

ஆக்ஸ்ட்டில் வெளியாகிறது 'பொதுவாக எம்மனசு தங்கம்'

'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. ஆகஸ்ட்டில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.



புதுமுக இயக்குநர் தளபதி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் 'பொதுவாக எம்மனசு தங்கம்'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகளைத் துரிதப்படுத்தி வந்தது படக்குழு.

இறுதிகட்டப் பணிகள் முடிந்து, தணிக்கை விண்ணப்பித்திருந்தார்கள். தற்போது தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட முடிவு செய்து, விரைவில் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளார்கள்.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், பார்த்திபன், சூரி, மயில்சாமி உள்ளிட்டோர் உதயநிதியுடன் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேனி, மதுரை, கோவை, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள்.


'பொதுவாக எம்மனசு தங்கம்' படப்பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து ப்ரியதர்ஷன் இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot