test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, 23 July 2017

லஞ்ச பேரம் எல்லா ஆட்சிகளிலும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது

நடிகர் பார்த்திபன்: லஞ்ச பேரம் எல்லா ஆட்சிகளிலும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது.


தமிழக அரசு மீது நடிகர் கமல் சரமாரியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறிவருகிறார். படங்களுக்கு வரிச் சலுகைக்கான தனிச் சான்றிதழ் தருவதற்கு லஞ்சம் கேட்கிறார்கள். என்னிடம் கேட்டபோது தர மறுத்துவிட்டேன். பலர் பயத்தில் இதுபற்றி வாய்திறக்காமல் இருக்கிறார்கள் என்றார்

கமலின் இந்த கருத்து தற்போது தமிழ் திரையுலகில் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது. நடிகர் பார்த்திபன் கூறும்போது,‘கமல் கூறியது மிகச் சரி. வரி விலக்கு பெற லஞ்சம் கேட்கப்படுகிறது. என் படத்துக்கும் கேட்டார்கள். தர மறுத்துவிட்டேன். லஞ்சத்தை நேரடியாக கேட்பதில்லை, மறைமுகமாக கேட்கிறார்கள் அல்லது உணர்த்துகிறார்கள்.

படம் தாமதமானாலும் நஷ்டம், வரிவிலக்கு கிடைக்காவிட்டாலும் நஷ்டம் என்பதால் வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர்களும் கொடுக்கிறார்கள்என்றார்

அதேபோல் இயக்குனர் சீனுராமசாமியும் கமலின் கருத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து தயாரிப்பாளர் ஒருவர் கூறும்போது,‘பெரிய படம், சிறிய படம் என்ற பேதம் இல்லாமல் வரிவிலக்குக்கு லஞ்சம் கேட்கிறார்கள்.


பெரிய நடிகர் நடித்த படத்துக்கு கோடி களில் பணம் தரப்பட்டிருக்கிறது. சுமார் 60 தயாரிப்பாளர்கள் பணம் கொடுத்து வரிவிலக்கு வாங்கியிருக்கிறார்கள். ஆனால் அப்படங்களை ரிலீஸ் செய்ய காத்திருந்தனர்

இதற்கிடையில் ஜிஎஸ்டி வரி அமலானதால் இனி வரிவிலக்கு செல்லாத ஒன்றாகிவிட்டது. இதனால் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுத் தரும்படி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்ததுடன், போராடவும் முடிவு செய்திருக்கிறார்கள்என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot