'வேலையில்லா பட்டதாரி 2' வெளியீட்டில் மாற்றம்: ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது
தனுஷ்
நடிப்பில் உருவாகியுள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் வெளியீடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தகவல்
இது
குறித்து
இப்படத்தை வெளியிடும் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில், "பல்வேறு காரணங்களால் 'விஐபி 2' படத்தின் வெளியீடு ஆகஸ்ட் முதல் வாரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி விரைவில் வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்ததை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷ், அமலா பால், கஜோல் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள படத்தை தனுஷ் மற்றும் தாணு தயாரித்திருக்கிறார்கள்.


No comments:
Post a Comment