test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, 22 July 2017

ஆகஸ்ட் 20-ல் வெளியாகிறது 'மெர்சல்' இசை

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் இசை ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியாகியுள்ளது. டீஸர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு உள்ளிட்டவை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவித்திருந்தது.

தற்போது ஆகஸ்ட் 20-ம் தேதி .ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'மெர்சல்' பாடல்கள் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அன்றைய தினமே ட்ரெய்லரும் வெளியாகும் என தெரிகிறது.


சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot