test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, 23 July 2017

ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நிறைவு: தனுஷ் தகவல்

ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நிறைவு: தனுஷ் தகவல்


தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது.

கனடா நாட்டைச் சேர்ந்த இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். பெல்ஜியம், பாரீஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

தனது முதல் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுபெற்றுள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார். "படப்பிடிப்பு முடிந்தது. ஃபகீரின் பயணம் முடிகிறது. அற்புதமாகத்தான் இருந்தது. என் மொத்த குழுவுக்கும் அன்பும், நன்றிகளும். கண்டிப்பாக உங்களை நினைவில் வைத்திருப்பேன். அடுத்த நிறுத்தம், வீடு !" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் தனுஷ்.

பிரபல ப்ரெஞ்ச் நாவலான 'The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard' திரைப்படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. பெரனீஸ் பெஜோ மற்றும் எரின் மொரியார்டி ஆகியோர் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.


ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், 'வடசென்னை', 'மாரி 2', 'கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம்' மற்றும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார் தனுஷ்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot