'விவேகம்' படப்பிடிப்பு நிறைவு: இயக்குநர் தகவல்
அஜித்
நடித்து
வரும்
'விவேகம்'
படத்தின்
படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதாக இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.
'விவேகம்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, செர்பியாவிலிருந்து
சென்னை
திரும்பியது படக்குழு. ஆனால், அதிகாரபூர்வமாக முழு படப்பிடிப்பும் முடிவு பெற்றதாக படக்குழு அறிவிக்கவில்லை.
இந்நிலையில் இன்று (ஜூலை 6) வியாழக்கிழமை என்பதால், இறுதிநாள் படப்பிடிப்பை சென்னையில் நடத்தி, மொத்த படப்பிடிப்பும் முடிவுபெற்றதாக, இயக்குநர் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது
இறுதிகட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விவேக்
ஓபராய்,
காஜல்
அகர்வால்,
அக்ஷரா ஹாசன், கருணாகரன் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

No comments:
Post a Comment