test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, 6 July 2017

வெஸ்ட்இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் இடம்பெற்றிக்கிறார்

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல்


கிங்ஸ்டன்இந்தியாவெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் வருகிற 9–ந் தேதி நடக்கிறது. இந்த போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டது. கடைசியாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி தொடரில் விளையாடிய அணியில் இடம் பிடித்த வீரர்களில் சரியாக விளையாடாத சிமோன்ஸ் மட்டும் நீக்கப்பட்டுள்ளார். மற்ற வீரர்கள் அப்படியே இடம் பிடித்துள்ளனர். நீண்ட கால இடைவெளிக்கு பிறகு அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். 2016–ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அணியில் இடம் பெற்று இருந்த கெய்ல் அதன் பிறகு தற்போது தான் அணிக்கு திரும்புகிறார். அணி தேர்வு குறித்து வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவர் கார்ட்னி புரோவ்னே கருத்து தெரிவிக்கையில், ‘கெய்ல் அணிக்கு திரும்புவதை வரவேற்கிறோம். 20 ஓவர் போட்டியில் அவர் மிகவும் நிறைவான பேட்ஸ்மேன். அவரது வருகை எங்கள் அணியின் தொடக்க வரிசையை வலுப்படுத்தும். அணியில் இளம் வீரர்களும், அனுபவம் வாய்ந்த வீரர்களும் சரியான கலவையில் இடம் பிடித்துள்ளனர். இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க இது நல்ல வாய்ப்பாகும்என்றார்.

வெஸ்ட்இண்டீஸ் அணி வருமாறு:–


கார்லஸ் பிராத்வெய்ட் (கேப்டன்), பத்ரீ, ரோன்ஸ்போர்ட் பீட்டான், கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ், ஜாசன் முகமது, சுனில் நரின், பொல்லார்ட், ரோவ்மன் பவெல், சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர், சாட்விக் வால்டன் (விக்கெட் கீப்பர்), கேஸ்ரிக் வில்லியம்ஸ்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot