test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, 24 July 2017

'தரமணி' படத்துக்கு 'ஏ' சான்றிதழ்

ராமின் 'தரமணி' படத்துக்கு தணிக்கையில் '' சான்றிதழ் கிடைத்துள்ளது. இதற்காக தணிக்கைக் குழுவை படக்குழு மறைமுகமாக கிண்டல் செய்துள்ளது.


 ஆகஸ்ட் 11-ம் தேதி 'தரமணி' வெளியீடு என்று படக்குழு விளம்பரப்படுத்தியுள்ளது. தணிக்கை அதிகாரிகள் இப்படத்துக்கு '' சான்றிதழ் அளித்துள்ளார்கள். இதைக் குறிப்பிட்டு போஸ்டரில் ஆண் 'ரா'வாக மது அருந்தினால் யு/... பெண் 'ரா'வாக அருந்தினால் ! ஆக தரமணி '' என்று மறைமுகமாக தணிக்கைக் குழுவை படக்குழு கிண்டல் செய்துள்ளது.

'தரமணி' படத்துக்கு '' சான்றிதழ் கிடைப்பதற்கு மிக முக்கியமான காரணம், அப்படத்தில் பெண் மதுஅருந்துவது போன்ற காட்சிகள் உள்ளதாம். ஆனால் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே மற்றும் இயக்குநர் ராம் "எந்தக் காட்சியையும் நீக்க முடியாது. நீங்க கொடுக்கிறதைக் கொடுங்க" என உறுதியாக நின்றிருக்கிறார்கள்

இப்போது '' சான்றிதழுடன் தான் வெளியாகவுள்ளது 'தரமணி'. இதுவரை இப்படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் இயக்குநர் ராமை வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.


ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தரமணி'. யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்தை சதீஷ்குமார் தயாரித்திருக்கிறார். நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது

சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட 'தரமணி' படத்தின் டீஸர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot