test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, 12 July 2017

தனுஷ் பட விழாவில் ஐஸ்வர்யா பங்கேற்காதது ஏன்?

தனுஷ் பட விழாவில் ஐஸ்வர்யா பங்கேற்காதது ஏன்? சவுந்தர்யா பதில்


தனுஷ் நடித்த ‘3’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அவரது மனைவி ஐஸ்வர்யா. அடுத்து, ‘வை ராஜா வைபடத்தை இயக்கினார். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் தங்கை சவுந்தர்யா, ‘கோச்சடையான்படத்தையடுத்துவேலையில்லா பட்டதாரி 2’ம் பாகம் படம் இயக்குகிறார். இதில் தனுஷ் நடிப்பதுடன் பட தயாரிப்பு பொறுப்பும் ஏற்றிருக்கிறார். இப்படத்தின் ஆடியோ விழா சில வாரங்களுக்கு முன் மும்பையில் நடந்தது. அடுத்து கடந்த சனிக்கிழமை சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் தனுஷ், சவுந்தர்யா, கஜோல் பங்கேற்றனர். ஆனால் இரு நிகழ்ச்சியிலும் ஐஸ்வர்யா பங்கேற்கவில்லை.


விஐபி 2ம் பாகம் தொடர்பாக நடந்த இரண்டு நிகழ்ச்சியிலும் ஐஸ்வர்யா பங்கேற்காதது ஏன்?’ என்று சவுந்தர்யாவிடம் கேட்டபோது,’புதிய படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதுவதில் ஐஸ்வர்யா பிஸியாக இருக்கிறார். அவரது வாழ்த்துக்கள் எங்களுடன் எப்போதும் உள்ளது. அவர் எங்களுக்கு உறுதுணையாக இருப்பதுடன் படத்தைபற்றி அறிந்து பரவசம் அடைந்தார். மேலும் எனது அப்பா (ரஜினி)வும் இப்படத்திற்காக நாங்கள் பணியாற்றிவருவதுபற்றி எங்களிடம் கேட்டறிந்து பாராட்டினார். இன்னும் அவர் இப்படத்தை பார்க்கவில்லைஎன்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot