test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, 2 July 2017

தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்

இயக்குநர் ஷங்கர்: தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்.


தமிழ் சினிமாவுக்கு அதிகமான வரி விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள் என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரிக்கு மேலே, தமிழக அரசு 30 சதவீதம் கேளிக்கை வரி உண்டு என்ற அறிவிப்பால் தமிழ் திரையுலகினர் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, இன்று முதல் தமிழக திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வரி விதிப்புக்கு பல்வேறு முன்னணி திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். முன்னணி இயக்குநர்கள் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "48 சதவீதம் முதல் 58 சதவீதம் வரை வரி. தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் கேளிக்கை வரி விதிப்பு தொடர்பாக முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட யாருமே இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.


ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக மட்டுமே கமல் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot