test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, 2 July 2017

‘ஹாட்ரிக்’ வெற்றியை நோக்கி இந்தியா

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்:‘ஹாட்ரிக்’ வெற்றியை நோக்கி இந்தியா பாகிஸ்தானுடன் இன்று மோதல்


டெர்பி:

11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறதுஇதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இதில் மிதாலிராஜ் தலைமையில் அடியெடுத்து வைத்துள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை 35 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை 7 விக்கெட் வித்தியாசத்திலும் துவம்சம் செய்ததுஇந்த நிலையில் இந்திய அணி தனது 3-வது லீக்கில் இன்று பாகிஸ்தானை டெர்பி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.

இந்திய அணியின் பலமே டாப்-3 வீராங்கனைகள் தான்மந்தனா (90, 106 ரன்), பூனம் ரவுத் (86, 0), கேப்டன் மிதாலி ராஜ் (71, 46) சூப்பர் பார்மில் இருக்கிறார்கள்மேலும் தீப்தி ஷர்மாபூனம் யாதவ்ஹர்மன்பிரீத் கவுர் உள்ளிட்டோர் சுழற்பந்து வீச்சில் மிரட்டுகிறார்கள்பாகிஸ்தானை விட வலுவாக காணப்படும் இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை நோக்கி வியூகங்களை தீட்டி வருகிறது.

சனா மிர் தலைமையிலான பாகிஸ்தான் அணி இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்கவில்லைதனது முதல் இரு ஆட்டங்களில் முறையே தென்ஆப்பிரிக்காஇங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.

அண்மையில் ஆண்கள் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்து முதல்முறையாக மகுடம் சூடியதுஅந்த வெற்றி பெண்கள் அணியினருக்கு நிச்சயம் உத்வேகம் அளித்திருக்கும்அதனால் இந்திய வீராங்கனைகளுக்கு கடும் சவால் அளிக்க வரிந்து கட்டி நிற்பார்கள்.

பெண்கள் ஒரு நாள் போட்டி வரலாற்றில் இந்திய அணி ஒரு போதும் பாகிஸ்தானிடம் தோற்றதில்லைஅந்த அணிக்கு எதிராக மோதியுள்ள 9 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளதுஇதில் இரு உலக கோப்பை ஆட்டங்களும் அடங்கும்அந்த பெருமையை இந்திய அணி தக்கவைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறதுஇன்றைய தினம் மேலும் 3 லீக் ஆட்டங்களும் நடக்கின்றனஅந்த வகையில் இங்கிலாந்து-இலங்கைஆஸ்திரேலியா-நியூசிலாந்துதென்ஆப்பிரிக்காவெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெவ்வேறு இடங்களில் சந்திக்கின்றனஇந்த ஆட்டங்களும் மாலை 3 மணிக்கே தொடங்குகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot