test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, 9 July 2017

மறுதணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ்

மறுதணிக்கையில் 'யு/' சான்றிதழ்: ஜூலை 21-ம் தேதி வெளியாகிறது 'விக்ரம் வேதா'


மறுதணிக்கையில் 'யு/' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து ஜூலை 21-ம் தேதி வெளியாகிறது 'விக்ரம் வேதா'

மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 'விக்ரம் வேதா' படத்தை தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. தணிக்கை அதிகாரிகள் படத்தைப் பார்த்து '' சான்றிதழ் வழங்கவே படக்குழு அதிர்ச்சியடைந்தது. மறுதணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள்.

திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம் மற்றும் மறுதணிக்கைக்கு சென்றதால் ஜூலை 7-ம் தேதி வெளியீட்டிலிருந்து பின்வாங்கினார்கள். தற்போது மறுதணிக்கையில் 'யு/' சான்றிதழ் உறுதியானதைத் தொடர்ந்து ஜூலை 21-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.


புஷ்கர் - காயத்ரி இணை இயக்கியுள்ள இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலெட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பி.எஸ்.விநோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் படத்தை ஷிகாந்த் தயாரித்துள்ளார். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது. காவல்துறை அதிகாரியாக மாதவனும், தாதாவாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot