இருமத
முறைப்படி சமந்தா - சைதன்யாவின் திருமணம்
சினிமாவில் தங்களது திருமணத்தை எப்படி நடத்தினார்களோ அதேபோல் நிஜத்திலும் நடத்த முடிவு செய்திருக்கிறது சமந்தா, நாக சைதன்யா காதல் ஜோடி. சென்ற ஜனவரி மாதம் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் அக்டோபர் மாதம் திருமணம் நடக்க உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு ‘யே மாயா சேசாவே’ படத்தில் முதன்முறையாக சமந்தா, நாக சைதன்யா ஜோடியாக நடித்தனர். இதில் கிறிஸ்தவ பெண்ணாக சமந்தா நடித்திருந்தார். கதைப்படி இவர்களது திருமணம் சர்ச்சில் நடக்கும். அதேபோல் நாகேஸ்வரராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா இணைந்து நடித்த ‘மனம்’ படத்தில் மீண்டும் சமந்தா நடித்தார்.
இதில்
இந்து
முறைப்படி சைதன்யா, சமந்தா திருமணம் நடக்கும். சினிமாவில் மலர்ந்த காதல் இவர்களுக்குள் நிஜமானது. சைதன்யா இந்து மதத்தை சேர்ந்தவர், சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். தங்களது திருமணத்தை இருமத முறைப்படி கோவாவில் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். இருவரது குடும்பத்தை சேர்ந்த சுமார் 100 பேர் இதில் பங்கேற்கின்றனர். வைதீக முறைப்படி முதலில் திருமணம் செய்கின்றனர். பிறகு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடக்கிறது.

No comments:
Post a Comment