நடிகை பாவனா கடத்தல் வழக்கு : நடிகர் திலீபின் சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் பல்சர் சுனில் இருக்கும் புகைப்படங்கள்
சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான் உள்பட தமிழ் மற்றும் ஏராளமான மலையாளப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பாவனா. இவர், கடந்த பிப்ரவரி 17–ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் காரில் கடத்திச் செல்லப்பட்டு, மானபங்கம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக, பல்சர் சுனில் என்பவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில், பிரபல மலையாள கதாநாயகன் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அதை அவர் மறுத்தார்.
அதே சமயத்தில், பல்சர் சுனிலின் நண்பர் ஒருவர், தன்னிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக போலீசில் நடிகர் திலீப் புகார் செய்தார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமைதி காத்து வந்த நடிகை பாவனா, பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள் மீது நான் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறது. போலீஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. என கூறி இருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கேரள போலீசார் நடிகர் திலீபிடம் 13 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். .
இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், நடிகர்கள் திலீப், நாதிர் ஷா மற்றும் முன்னாள் மேலாளர் அப்புனி ஆகியோருக்கு சம்மன் அனுப்பினர். கடந்தவாரம் நள்ளிரவு 1 மணி வரை மூன்று பேரிடமும் அலுவாவில் உள்ள போலீஸ் முகாமில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் திலீப்பின் புதிய படமான ஜார்சேட்டன்ஸ் பூரம் என்ற படத்தின் படப்பிடிப்பு தளம் அருகே சுனில் நடமாடிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த நிலை பல்சர் சுனில் தங்களை மிரட்டியதாக நடிகர் திலீப்பும் அவரது நண்பருமான டைரக்டர் நாதிர் ஷாவும் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
போலீசாரிடம் அளித்துள்ள புகாரில் விரிவான ழுழுவிவரங்களையும் தெரிவித்து உள்ளோம். போலீசார் நடத்தி வரும் விசாரணை மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. என திலீப் கூறி உள்ளார்.
திலீப்ப்பின் மேனேஜரிடம் சுனில் பணம் கேட்டு மிரட்டிய ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இது கேரள சேனல்களில் ஒளிபரப்பபட்டு வருகிறது. இது குறித்து போலீசார் புதிய விசாரணை ஒன்றை நடத்த உள்ளனர்.

No comments:
Post a Comment