சூர்யா,
சரத்குமார், சத்யராஜ், விவேக் உள்ளிட்ட நடிகர்களுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து
கடந்த
2009-ம்
ஆண்டு
ஒரு
நாளிதழ்
வெளியிட்ட செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தினர் கண்டன பொதுக் கூட்டம் நடத்தினர். அப்போது பத்திரிகையாளர்களை நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், விவேக், விஜயகுமார், இயக்குநர் சேரன், அருண் விஜய், ஸ்ரீபிரியா உள்ளிட்டவர்கள் அவதூறாக பேசியதாக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரோசாரியோ மரிய சூசை என்பவர் ஊட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த
வழக்கு
விசாரணைக்கு நடிகர்கள் யாரும் ஆஜராக வில்லை. இதையடுத்து, அனைவ ருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்து ஊட்டி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த பிடிவாரன்டை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில், தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர்கள் சூர்யா, சரத் குமார், சத்யராஜ் உள்ளிட்ட 8 பேரும் சென்னை உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், நடிகர்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment