test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, 24 July 2017

'தானா சேர்ந்த கூட்டம்' பர்ஸ்ட் லுக் வெளியீடு

'தானா சேர்ந்த கூட்டம்' பர்ஸ்ட் லுக் வெளியீடு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா இன்று (ஜூலை 23) தனது 42-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

இதுவரை படத்தைப் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் எதுவுமே வெளியிடாமல் காத்திருந்தது படக்குழு. சூர்யா பிறந்த நாளான இன்று (ஜூலை 23) முதல் விளம்பரப்படுத்தும் பணிகளையும் தொடங்கியுள்ளது.

தற்போது சென்னையில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதோடு மொத்த படப்பிடிப்பும் முடிவுற்று, இறுதிகட்ட பணிகளைத் துரிதப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யா கிருஷ்ணன், சுரேஷ் மேனன், கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்து வருகிறார்.




இப்படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot