அதிக பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் அடித்த இந்திய வீரர் : தோனி ரசிகர்கள் வேதனை.
ஆண்டிகுவா: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரில் இந்திய அணி 2-0
என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், நேற்று விளையாடிய போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்தியா அடி பணிந்தது. 11
ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக தோனி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
108 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் அடித்த தோனி இறுதியில் 114 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
இதனால், இந்திய அணியின் தோல்விக்கு தோனியே காரணம் என்று கடுமையாக சமூக வலைதளங்களில் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தோனி ஒரு சோகமான சாதனையையும் படைத்துள்ளார். அதிக பந்துகளை வீணடித்து, மிகவும் மெதுவாக அரை சதத்தைக் கடந்து கங்குலியின் முந்தைய சாதனையை தோனி முறியடித்துள்ளார். அரைசதத்துக்காக தோனி வீணடித்த பந்துகளின் எண்ணிக்கை மட்டும் 70 ஆகும்.
இதேபோல,
2005-ம் ஆண்டு இந்தியா, இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்கேற்றபோது,
105 பந்துகளில் அரை சதம் எடுத்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி. 16
ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது கங்குலியின் சாதனையை தோனி முறியடித்துள்ளார். இதனால், 'இப்படியொரு சாதனையா' என ரசிகர்கள் வேதனை தெரிவித்து, சமூக வலைதளங்களில் கருத்து பதிவுசெய்துவருகின்றனர். ஒட்டுமொத்தமாக அதிக பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் தோனி இரண்டாம் இடம் வகிக்கிறார். சடகோபன் ரமேஷ் கடந்த
1999 ஆம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக
117 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் அடித்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
3-வது ஒருநாள் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி 78 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு மேன் ஆப் தி மேட்ச் விருதை பெற்ற தோனி, தன்னை ”ஒயினுடன்” ஒப்பிட்டு பேசி இருந்தார். இந்த நிலையில், அடுத்த போட்டியிலேயே தோனி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறார்.

No comments:
Post a Comment