test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, 12 July 2017

இயக்குனர் ராஜமவுலி வருத்தம்

பாகுபலி படத்தில் ஸ்ரீ தேவி நடிப்பது குறித்த தகவல் வெளியானதற்கு ராஜமவுலி வருத்தம்


பாகுபலிபடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி வேடத்துக்கு முதலில் ஸ்ரீதேவியை தான் நடிக்க வைப்பதாக இருந்தது. நீண்ட நாட்கள்  கால்ஷீட் மற்றும் சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. ரம்யா கிருஷ்ணன் நடித்ததால் அந்த வேடம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்திருக்கிறது.

ஸ்ரீ தேவி பாகுபலியில் நடிக்க ரூ.6 கோடி வரை சம்பளம் கேட்டதாகவும் மேலும் தங்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலின் முழு தளத்தையும்  பயன்படுத்த வேண்டும் என கூறியதாகவும்  அதனால் தான் அவருக்கு பதில்  ரம்யா கிருஷ்ணன் நடிக்க வைக்கபட்டதாகவும் தகவல் வெளியானது.

இது குறித்து கருத்து தெரிவித்து இருந்த நடிகை ஸ்ரீதேவி நான் அப்படி இருந்து இருந்தால் இவ்வளவு காலம்  சினிமா உலகில் இருந்து இருக்க முடியாது  மக்கள் என்னை பேக்கிங் செய்து அனுப்பி  இருப்பார்கள். ஆனால் இது போன்றவைகளை நான் கேட்டதாக தவறாக ராஜமவுலி கூறினால் அது எனக்கு தெரியாது. ஆனால் இது போன்று பேசுவது  நல்லது அல்ல.

 ராஜமவுலி கூற்று  எனக்கு அதிர்ச்சி அளிக்கிறதுராஜமவுலியிடம் கவுரவமாகவும் அமைதியாவும் நடந்து கொண்டேன்அவருடன் வேலை  செய்வதில்  எனக்கு  மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆனால் இந்த விவகாரத்தில் அவர் பேசியது மிகவும் வருத்தமாக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

பாகுபலி படத்திற்காக மூத்த பாலிவுட் நடிகை  ஸ்ரீ தேவியை சந்தித்தது குறித்த தகவல் வெளியானதற்கு  இயக்குனர் ராஜமவுலி வருத்தம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து ராஜமவுலி கூறும் போது ஸ்ரீதேவியை சந்த்திதது குறித்து மறுக்கவில்லை.ஆனால் ஸ்ரீதேவி பற்றி பேசுவதை தவித்தார்.

 யார் பொருத்தமானவர்கள் என  மக்கள் தான் முடிவு செய்யவேண்டும் என நம்புகிறேன். ஆனால் ஒன்று நிச்சயம் நான் பொது மேடையில் இது குறித்து விவாதிக்கவிரும்பவில்லைஅது தவறானது அதற்கு நான் வருந்துகிறேன்.

 பல வருடங்களாக  தென்னிந்திய  சினிமா சார்பில் மும்பையில் கொடிகட்டி பறக்கும் நடிகை ஸ்ரீதேவி மீது நான் மிகுந்த மரியாதை வைத்து உள்ளேன்.நான் அவர்களை வெற்றிபெற வாழ்த்துகிறேன். அவருடைய அம்மா படம் டிரைலர் மிக நன்றாக உள்ளது அது வெற்றி பெற வாழ்த்துகிறேன்.


"ஸ்ரீதேவியின் விருப்பங்களைப் பற்றி கேட்ட பிறகு, எங்கள் அணி மயங்கி விட்டது.அவருடைய கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு எங்கள் வரவுசெலவுத்திட்டத்திற்கு மேல் இருப்பதாக நாங்கள் நினைத்தோம். ஆதனால் நாங்கள் ரம்யா கிருஷ்ணனை அணுகினோம். எங்கள் படத்தில் ஸ்ரீதேவி யை நடிக்க வைக்கும் யோசனையை நாங்கள் கைவிட்டுவிட்டோம் என கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot