சுசீந்திரன்: என்னை
வியக்க
வைத்த
2-வது
நடிகர்
விஜய்
சேதுபதி
இன்றைய
தலைமுறை
நடிகர்களில் என்னை நடிப்பில் வியக்க வைத்த இரண்டாவது நடிகர் விஜய் சேதுபதி என்று இயக்குநர் சுசீந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
புஷ்கர்
- காயத்ரி
இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலெட்சுமி சரத்குமார், ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம் வேதா'. சாம் இசையமைத்துள்ள படத்துக்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சஷிகாந்த் தயாரித்திருக்கிறார்.
ஜூலை
21-ம்
தேதி
வெளியாகியுள்ள இப்படத்துக்கு விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நேற்று
இரவு
'விக்ரம்
வேதா'
திரைப்படத்தை குடும்பத்தினருடன் திரையரங்கில் பார்த்தேன். இப்படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இருவருக்கும் எனது வாழ்த்துகள். கதை சொன்ன விதமும் நடிகர்களை கையாண்ட விதமும் மிகவும் நேர்த்தியாக இருந்தது.
மாதவன்,
விஜய்
சேதுபதி
இருவரும்
நடிப்பில் அசால்டு பண்ணி இருக்காங்க. (நீ நம்பின கடவுள் உன்னை கைவிட்டாலும், உன் உழைப்பு உன்னை கைவிடாது என்பதற்கு விஜய் சேதுபதி ஓர் உதாரணம்..)
இன்றைய
தலைமுறை
நடிகர்களில் என்னை நடிப்பில் வியக்க வைத்த இரண்டாவது நடிகர் விஜய்சேதுபதி. இப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
வித்தியாசமான படங்களை மட்டுமே தயாரிக்கும் தயாரிப்பாளர் 'ஒய்.நாட்' சஷிகாந்த் சார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

No comments:
Post a Comment