test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, 2 July 2017

22-வது ஆசிய தடகள போட்டி: 95 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

புவனேஷ்வரில் நடைபெற உள்ள ஆசிய தடகள போட்டியில் கலந்து கொள்ளும் 95 பேர் கொண்ட அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய தடகள போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறதுஅந்த வகையில் 22-வது ஆசிய தடகள போட்டி வரும் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெறு கிறதுஇந்த தொடரில் இந்தியா சார்பில் 95 பேர் அடங்கிய அணி கலந்துகொண்டு விளையாட உள்ளது.

இந்திய தடகள சம்மேளனத் தலைவர் அடில் சுமரிவாலா கூறும் போது, “கடந்த முறை சீனாவின் வூகான் நகரில் நடைபெற்ற தொடரில் இந்தியா 13 பதக்கங்கள் வென்றதுதற்போது அதைவிட அதிக அளவில் பதக்கங்களை இந்திய அணி வெல்லும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

ஏற்கெனவே திறமையை நிரூபித்துள்ளவர்களும்அற்புத மான புதிய திறன்களைக் கொண்ட வர்களும் அணியில் உள்ளனர்டூட்டி சந்த்சரபானி நந்தாஅமியா குமார் மாலிக் ஆகியோர் பதக்க மேடையை அலங்கரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

மேலும் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவீராங்கனை அனு ராணிநீளம் தாண்டுதல் விரர் அங்கித் சர்மாஸ்டீபில்சேஸ் வீராங்கனை சுதா சிங், 4x400 மீட்டர் மகளிர் ரிலே அணியை சேர்ந்த நிர்மலா ஆகியோர் மீதும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்றார்.

அணி விவரம்:

ஆடவர் பிரிவுஅமியா குமார் மாலிக் (100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம்), முகமது அனாஸ்அமோஜ் ஜேக்கப்ஆரோக்ய ராஜீவ் (400 மீட்டர் ஓட்டம்), ஜின்சன் ஜான்சன்விஷாம்பர் கெல்கர் (800 மீட்டர் ஓட்டம்), அஜெய் குமார் சரோஜ்சித்தாந்தா ஆதிகரி (1500 மீட்டர் ஓட்டம்), லட்சுமணன்முரளி குமார் காவித் (5 ஆயிரம் மீட்டர் ஓட்டம்), லட்சுமணன்கோபி தோனாகல்காலிதாஸ் ஹிராவே (10 ஆயிரம் மீட்டம் ஓட்டம்), நவீன் குமார்துர்கா பகதூர் புத்தா (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபில்சேஸ்), சித்தாந் திங்கலயாபிரேம் குமார் (110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்), ஜபிர்சந்தோஷ் குமார்துர்கேஷ் குமார் பால் (400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்).

சிவா (போல் வால்ட்), சேத்தன்அஜெய் குமார் (உயரம் தாண்டுதல்), அங்கித் சர்மாசம்ஷீர்சித்தார்த் மோகன் நாயக் (நீளம் தாண்டுதல்), அர்பிந்தர் சிங்கார்த்திக் (டிரிப்பிள் ஜம்ப்), தஜிந்தர் பால்ஜஸ்தீப் திங் திலான்ஓம் பிரகாஷ் ஹர்கனா (குண்டு எறிதல்), விகாஷ் கவுடாதர்மராஜ் யாதவ்கிர்பால் சிங் (வட்டு எறிதல்), நீரஜ் குமார் (சங்கிலி குண்டு எறிதல்), நீரஜ் சோப்ராதவிந்தர் சிங் கங்அபிஷேக் சிங் (ஈட்டி எறிதல்).

ஜக்தர் சிங்அபிஷேக் ஷெட்டி (டெக்கத்லான்), அமியா குமார் மாலிக்ஜோதி சங்கர் தீப்நாத்அனுரூப் ஜான்இலக்கிய தாசன்பிரவீன் முத்து குமரன்சிந்தா சுதாகர் (4x100 மீட்டர் ரிலே), முகமது அனாஸ்அமோஜ் ஜேக்கப்ஆரோக்கிய ராஜீவ்சச்சி ராபிமோகன் குமார்முகமது (4x400 மீட்டர் ரிலே).

மகளிர் பிரிவு:

டூட்டி சந்த்சரபானி நந்தா (100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம்), நிர்மலாபூவம்மாஜிஸ்னா மேத்யூ (400 மீட்டர் ஓட்டம்), டுன்டி லூக்காஅர்ச்சான ஆதவ்லில்லி தாஸ் (800 மீட்டம் ஓட்டம்), மோனிகா சவுத்ரி (1500 மீட்டர் ஓட்டம்), சூரியாசஞ்ஜீவானி ஜாதவ் (5 ஆயிரம் மீட்டர் ஓட்டம்), சூரியாசஞ்ஜீவானி ஜாதவ்மீனு (10 ஆயிரம் மீட்டர் ஓட்டம்), சுதா சிங்பாருல் சவுத்ரி (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபில்சேஸ்), நயானா ஜேம்ஸ் (100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்), அனுஜாவுனா முர்முஅர்பிதா (400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்).

சங்கீதா (போல் வால்ட்), சஹானா குமார்சுவப்னா பர்மான் (உயரம் தாண்டுதல்), நயானா ஜேம்ஸ்நீனாகார்த்திகா (நீளம் தாண்டுதல்), ஷீனாஜாலின் முரளி லோபா (டிரிப்பிள் ஜம்ப்), மன்பிரித் கவுர்அனாமிகா தாஸ்ராமன்பிரித் கவுர் (குண்டு எறிதல்), கமால்பிரித் கவுர் பால்சீனா பூனியாஹிமானி சிங் (வட்டு எறிதல்), சரிதா ஆர்.சிங்கன்ஜன் சிங் (சங்கிலி குண்டு எறிதல்), அனு ரானிபூனம் ராணி சிங்சுமன் தேவி (ஈட்டி எறிதல்), சுவப்னா பர்மான்பூர்னிமாலிஸ்கி ஜோசப் (ஹெப்டத்லான்).

டூட்டி சந்த்சரபானி நந்தாமெர்லின் ஜோசன்ரீனா ஜார்ஜ்ருமா சர்கார்ஹிமா ராய் (4x100 மீட்டர் ரிலே), நிர்மலாபூவம்மாஜிஸ்னா மேத்யூவிஜயகுமாரிசரிதா பென் கெய்க்வாட்தீபஸ்ரீ மஸூம்தார் (4x400 மீட்டர் ரிலே).


இவர்களில் நயானா ஜேம்ஸ்ஜாலின் முரளி லோபோவிகாஷ் கவுடாசித்தார்த் மோகன் நாயக்கார்த்திக்சித்தாந் திங்கலயா ஆகியோருக்கு உடல் தகுதி சோதனை நடத்தப்பட உள்ளதுஇதில் இவர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிய தடகள போட்டி யில் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot